• Jul 24 2025

என்னது... கர்ப்பமாக இருக்காரா மஹாலக்ஷ்மி? வைரலாகும் வீடியோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மஹாலக்ஷ்மி. ஹிட் சீரியல்கள் பலவற்றில் நடித்து வந்தவர் சில வருடங்களுக்கு முன்பு தேவையில்லாத பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். அதாவது பிரபல நடிகர் ஈஸ்வருக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் பரவியது.

அந்த பிரச்சனை முடிவடைந்து எல்லாம் ஒரு அளவிற்கு சரியாகும் நேரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். 

திடீரென திருமண புகைப்படங்களை வெளியிட இதனால் பலரும் ஷாக்கானார்கள். மேலும் உருவ கேலியும் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இந்த தம்பதிகள் எதையுமே காதில் வாங்கவே இல்லை.

பரபரப்பாக பேசி வந்த இந்த பிரச்சனையும் அடங்கி தான் போனது. இப்படி இருக்க இப்பொழுது மஹாலக்ஷ்மி வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அதனை பார்த்த பலருக்கும் ஷாக் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது லைட்டாக தொப்பையுடன் காட்சியளிப்பதை பார்த்து ஒருவேளை கர்ப்பமாக இருக்கிறாரோ, என்று சந்தேகித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





Advertisement

Advertisement