• Jul 25 2025

இன்னொரு பிறவியா இவர்..? பிரித்துப் பார்க்க முடியாதளவிற்கு அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து, இன்று வெள்ளித்திரையையே தன்னுடைய நடிப்பினாலும் நகைச்சுவை கலந்த பேச்சினாலும் கட்டிப் போட்டு வைத்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். 


அந்தவகையில் இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். 


மேலும் மாவீரன் படத்தை முடித்தபின் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் புதிதாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். 


இந்நிலையில் சமீபகாலமாகவே நடிகர், நடிகைகளை போலவே இருக்கும் சில நபர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகுவது வழமையாக இருக்கின்றது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் வெளியாகி இருக்கின்றது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement