• Jul 26 2025

மருத்துவமனையில் மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் பாலா..ஓ இது தான் விஷயமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பாலா கல்லீரல் நோய் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மேலும் அவர் மோசமான நிலையில் இருந்தார். பாலா தற்போது மருத்துவமனையில் தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடி வருகிறார். 


அவர் தனது மனைவி எலிசபெத்துடன் அவர் கேக் வெட்டி கொண்டாடினார். கேக் வெட்டும் வீடியோவை பாலா  முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.


அவருக்கு பெரிய அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகவும், மீண்டும் உயிர் பிழைப்பேன் என்றும் பாலா கூறியுள்ளார்.


 அத்தோடு நடிகர் கடந்த 5 ஆண்டுகளாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடுமையான இருமல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சை பெற்றார். 

மருத்துவமனைக்கு வந்த உடனேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.எனினும் இதற்கிடையில், மனைவி எலிசபெத் உதயன், மக்கள் காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்து ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Advertisement

Advertisement