• Jul 25 2025

மற்றுமோர் அதிர்ச்சி.. பிரபல நடிகை திடீர் மரணம்... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுபி சுரேஷ். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அதன் பின்னரே மிகவும் பிரபலம் ஆனவர். மேலும் காமெடி கலந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடித்துப்போனதால் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.


அந்தவகையில் சுபி சுரேஷ் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுத்து வழங்கியது 'சினிமாலா' என்கிற நிகழ்ச்சி தான். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி மூலமே அவர் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். 


இதனைத் தொடர்ந்து தனது கடின உழைப்பினால் படிப்படியாக முன்னேறி தற்போது மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சுபி சுரேஷ், தற்போது திடீரென மரணம் அடைந்து இருப்பது திரையுலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


அந்தவகையில் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


இவரின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாகவே தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மலையாள நடிகை சுபி சுரேஷும் மரணமடைந்திருப்பது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  

Advertisement

Advertisement