• Jul 24 2025

“ரஜனி சார் கண்ணில இருக்கிற நடிப்பு வெறி இவன்கிட்டையும் இருக்கு” இளம் நடிகரை பாராட்டிய பிருந்தா மாஸ்டர்

ammu / 2 years ago

Advertisement

Listen News!

thugs திரைப்படத்தின் நிகழ்வு ஒன்றில் பிருந்தா மாஸ்டர் கலந்து கொண்டார். இவர் ப்ரொடியூசர் சிபு சாரிற்கு நன்றி இந்த படத்தை எனக்கு கொடுத்ததற்கு அதை விட உங்களுடைய பையனை படத்தில் இணைத்ததற்கு என்று கூறியிருந்தார். 


மேலும் அவர் கூறுகையில், நான் முதலில் தயங்கினேன் ஒரு பையனோடயா? நடிக்கப்போறேன் என்று பிறகு அவனை நேரில் அழைத்து பார்த்தேன் ரஜினி சார் கண்ணில இருக்கிற நடிப்பு வெறி இவன்கிட்டயும் இருக்கு, இவன் ஒரு நல்ல ஆக்டர் ஆக வருவான், அப்பிடி ஒரு நடிப்பு என்று ரிதுவை பாராட்டினார்.


அப்பா ப்ரொடியூசர் என்று ஒரு ஆட்டிடியூட் கூட இல்லை அவனிடம். கம்மியாக தான் பேசுவான் ஆனால் வேலையை கட்சிதமா முடிச்சிருவான். அதுமட்டுமல்ல அவன் ஒரு நல்ல டான்சர் என்று கூறினார். அதையடுத்து நான் மியூசிக் போட்டு தான் சீன் எடுப்பேன்.


எனக்கு பயங்கரமா பாக்போனாக இருந்தது என்னுடைய எடிட்டர் பிரவீன் அந்தோணி. அதை தொடர்ந்து பிரிகேஷ் இவன் எப்படி இவ்வளவு வேலை பாக்குறான் என்று நான் ஜோசித்தேன். கேமரா மேன் யார் போடலாம் என்று சிபு கேட்ட போது, நான் பிரிகேஷ் என்று சொன்னேன்.


அந்த அளவிற்கு அவன் ஒரு சிறந்த கேமரா மேன் என்று எல்லோரையும் பாராட்டி பேசினார் மாஸ்டர். இந்த படம் எப்படி பட்ட வெற்றியை தர போகிறது என்று பார்ப்போம்.


Advertisement

Advertisement