• Jul 26 2025

அந்தோணி தாசன் என்னை காதலியாகக் கூட பாவிச்சிருக்காரு- கர்ணன் படப்பிரபலத்தின் ஓபன் பேட்டி

stella / 2 years ago

Advertisement

Listen News!

நகைச்சுவை நடிகர் கருணாஸ் நடிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் அந்தோணி தாசன். இவர் இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

குறிப்பாக கானா பாலாவுடன் இவர் இணைந்து பாடிய காசு பணம் துட்டு மணி மணி பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது. பாண்டிநாடு, குக்கூ, முண்டாசுப்பட்டி, ஜிகர்தண்டா, ஆம்பள, காக்கி சட்டை, ஜில் ஜங் ஜக், கவண், பேட்ட, காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.


இந்த ஆண்டு இவர் பாடிய டிப்பாம் டப்பாம் பாடல் சூப்பர் டூப்பர் அடித்தது. இந்த நிலையில் அந்தோணி தாசன் தற்போது புதிய இசை நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அதன் துவக்க விழா நிகழ்ச்சியில் கர்ணன் படத்தில் "கண்டா வர சொல்லுங்க" பாடல் பாடி பிரபலமான கிடக்குழி மாரியம்மாள் பேசிய பேச்சு டிரெண்டாகி வருகிறது.

அந்தோணி தாசன் என்னை அம்மாவா, அண்ணியா ஏன் சொல்லப் போனா காதலியாக் கூட பாவிச்சிருக்காரு.. காதலுக்கு எதுக்குங்க வயசு.. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து டூயட் பாட்டு பாடினா அப்படி இருக்கும் என பேசியதும் விழாவில் கலந்து கொண்ட பலரும் அரங்கம் அதிரும் அளவுக்கு சிரித்து விட்டனர். எங்களுக்குள் இருக்கும் நட்பு மிகப்பெரியது என அந்தோணி தாசன் உடனான நட்பு குறித்து பேசி உள்ளார் 


ஆரம்ப காலத்தில் இருந்தே நாங்க எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்ந்தோம்.. சினிமாவில் இப்படியொரு இடத்தை அந்தோணி தாசன் பிடிச்சிருக்காரு என்றால், அதற்கு அவர் பட்ட கஷ்டமெல்லாம் எண்ணிக்கையில் அடங்காது என அந்தோணி தாசனின் கடந்து வந்த பாதைகளையும் பேசி அவரது இசை நிறுவனம் பெருசா வளரணும் என வாழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement