• Jul 24 2025

கார்த்திக்கை மோசமானவன் எனத் திட்டிய அனு- போலீஸ் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இநத சீரியலில் தற்பொழுது கார்த்திக்கின் வில்லத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய வந்து விட்டது இதனால் எப்போது அனுவுக்கு உண்மை எல்லாம் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

அதாவது சுந்தரி தன்னை விரும்புவதாக கார்த்திக் அனுவிடம் சொல்லி வைத்திருப்பதால் சுந்தரிக்கு எப்படியாவது இரண்டாவது திருமணம் பண்ணியே ஆகனும் என்று அனி பிடிவாதமாக இருக்கின்றார். இது குறித்து சுந்தரியிடம் கேட்ட போது சுந்தரி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதனால் அனு சுந்தரியின் வீட்டுக்குச் சென்று சுந்தரிக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கனும் என்று சொல்ல மாலினி கிருஷ்ணா மற்றும் கார்த்திக்கின் அக்கா ஆகியோர் அதிர்ச்சியடைகின்றனர்.


இப்படியான நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் சுந்தரி கோயிலால் வந்ததும் அனு வீட்டுக்கு வந்து போன விஷயத்தை சொல்ல சுந்தரி அதிர்ச்சியடைகின்றார். மறுபுறம் அனு சுந்தரி குடும்பத்தினர் அவ புருஷனை விட்டுக் கொடுத்து பேசுறாங்க என்றால் அவன் எவ்வளவு மோசமானவனாக இருக்கனும் என்று சொல்கின்றார்.

அப்போது போலீஸ் வான் வர கார்த்திக் அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகியுள்ளதைக் காணலாம்.


Advertisement

Advertisement