• Jul 24 2025

அறந்தாங்கி நிஷா வீட்டில் தீடீரென நடந்த கொண்டாட்டம்..அவரே வெளியிட்ட புகைப்படம்

lathushan / 2 years ago

Advertisement

Listen News!

அறந்தாங்கி நிஷா கலக்க போவது யாரு எனும் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானார். மேலும் அதில் இவரது நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமல்லாமல் இளைஞர்களையும் கவர்ந்தது. 


மேலும் அதனை தொடர்ந்து தனது நகைச்சுவை திறமை மூலம் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நிஷா பங்கேற்றார். அதன் அடுத்தக்கட்டமாக தற்போது வெள்ளித்திரையிலும் நிஷா நடிக்க ஆரம்பித்து விட்டார்.


மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரையும் சின்னத்திரையில் அறிமுகம் செய்தார் நிஷா.


அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தும் இருக்கிறார். அதன்பின் KPY சாம்பியன்ஸ், ராமர் வீடு என தொடர்ந்து பல நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.


மேலும் அறந்தாங்கி நிஷா, தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதன்பின் கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம், ட்ரிக்கர் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் Mr and Mrs சின்னத்திரை 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 


இந்நிலையில், அறந்தாங்கி நிஷாவின் தம்பிக்கு மகன் பிறந்துள்ளார். இதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட அறந்தாங்கி நிஷா, தனக்கு மருமகன் பொறந்துவிட்டான் என்று பதிவுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement