• Jul 25 2025

ரீல்ஸ் வீடியோ போட்ட நடிகையை கழுத்தை நெரித்துக்கொன்ற கணவன்...நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 ரீல்ஸ் வீடியோ போட்ட துணை நடிகையை அவரது கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம்  பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

 திருப்பூரைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் இவரது மனைவி  தான் சித்ரா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 35 வயதான சித்ரா திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவ்வாறுஇருக்கையில்  சித்ராவுக்கு டிக்டாக் மற்றும் ரீல்ஸ் வீடியோ போடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு அவரது கணவர் அமிர்தலிங்கம்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரீல்ஸ் வீடியோ போடக்கூடாதென பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அதனை காதில் வாங்கிக் கொள்ளாத சித்ரா, ரீல்ஸ் வீடியோ போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். எனினும் இதனை தொடர்ந்து டிக்டாக் மூலம் அறிமுகமானர் சிலர் சித்ராவுக்கு சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து கணவரின் பேச்சை மீறி அவர்களுடன் சென்ற சித்ரா சென்னையில் சில மாதங்கள் தங்கி சினிமாவில் நடித்து வந்துள்ளார். இவ்வாறு.இருக்கையில்  கடந்த வாரம் தனது மூத்த மகளின் திருமணத்திற்காக திருப்பூர் திரும்பியுள்ளார் சித்ரா. அப்போது சித்ராவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்ற சித்ராவை சமாதானம் செய்து மீண்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறுஇருக்கையில் நேற்றுக் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை திறந்து உள்ளே பார்த்துள்ளனர். அப்போது சித்ரா கழுத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்தோடு  கழுத்தில் காயங்கள் இருந்ததால் சித்ரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமிர்தலிங்கத்தை பிடித்து விசாரித்தனர் போலீசார்.

அதில் சித்ரா சினிமாவில் நடிப்பது பிடிக்காததால் அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்புக்கொண்டார் அமிர்தலிங்கம். எனினும்  அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவில் நடித்ததற்காக கட்டிய மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement