• Jul 24 2025

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பிரபலங்கள் இவ்வாறு தான் தேர்வாகினார்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரமாண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தில் நடித்த கதாப்பாத்திரங்களை மணிரத்னம் எவ்வாறு தேர்வு செய்தார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்திரத்திற்கு கம்பீரம், தோரனை, அழகு ஆகியவை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இயக்குநர் அதில் ஜெயம் ரவியை நடிக்க வைத்துள்ளார். அதேபோல் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு வீரம், சாணக்யத்தனம், குறும்புத்தனம்,  அனைவரையும் கவரும் குணம் ஆகியவற்றை இயல்பிலேயே உள்ளடக்கிய தோற்றம் கொண்ட நடிகர் வேண்டும் என்பதால் கார்த்தியை தேர்வு செய்தாராம்.


கரிகாலன் கதாபாத்திரத்திற்கு கம்பீரம், வேகம், கோபம், போர்குணம், சிறந்த நடிப்பு கொண்ட ஒரு நடிகர் வேண்டும் என்பதால் அப்போதும் இப்போதும் அவர் நினைவில் இருந்தவர் விக்ரம் மட்டுமே. 

இவர்களையடுத்து, நந்தினி கதாபாத்திரத்திற்கு அனைவரையும் வசீகரிக்கும் அதீத அழகு, பார்வையால் பேசுக் கண்கள், வெளியே தெரியாத கோபம், சூழ்ச்சி ஆகியவற்றிற்கு  பொருந்தும் தோற்றம் கொண்ட நடிகை வேண்டும். அதற்கு ஐஸ்வர்யா ராய் மட்டும் பொருத்துவார் என அப்போதே அவரை சம்மதிக்க வைத்துள்ளார் .


குந்தவை கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் பல நடிகை யோசித்துள்ளனர். அவர்களிடம் பேச்சு வார்த்தையும் நடத்தியுள்ளார். ஆனால், தான் எதிர்பார்க்கும் பக்குவமும், அறிவும், வாதிடும் திறமையும் கொண்ட நடிகை தேர்வாகவில்லை. அந்த நிலையில்தான் த்ரிஷாவை நேரில் அழைத்து பேசியுள்ளார் மணிரத்னம். அவர் எதிர்பார்த்த தோற்றம், பக்குவம் என அனைத்திற்கும் த்ரிஷா பொருந்தியுள்ளார். எனவேதான் அவர் த்ரிஷாவை குந்தவையாக மாற்றியுள்ளார்.

மணிரத்னம் தன்னுடைய கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை தோற்றங்களை மட்டும் வைத்து உறுதி செய்யவில்லை. அவர்களின் நேரம், ஆர்வம், உழைப்பு, கால்ஷீட் என அனைத்தும் கொடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திய பின்பே ஒப்பந்தம் செய்துள்ளார். இதன் மூலமே பொன்னியின் செல்வன் இன்று சாத்தியமாகியுள்ளது என படக்குழுவினர் கூறுகின்றனர்.


Advertisement

Advertisement