• Jul 24 2025

ஐஸ்வர்யா ராயுடன் ஒரு படத்தில் கூட ஜோடி சேர முடியவில்லை- விக்ரம் கூறிய சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 


இப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் படக்குழுவினர் மிகவும் வேகமாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரம் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

அதாவது ஐஸ்வர்யா ரொம்ப டெடிக்கேட்டான பொண்ணு குடும்பத்தையும் சரி வீட்டையும் சரி சமமாக பாலன்ஸ் பண்ணிட்டு வருகின்றார். பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் போது நான் மெய் மறந்து நின்று விட்டேன். அப்படி சூப்பராக ஆடியிருந்தாங்க.


எனக்கும் அவங்களுக்கும் இயல்பாகவே கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் ஆனால் ஒரு படத்தில் கூட அவருடன் ஜோடியாக நடிச்சது இல்லை என்றும் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement