• Jul 26 2025

எதிர்நீச்சல் சீரியலில் புதிதாக இரண்டு நாயகிகள் என்ட்ரீ கொடுக்கிறார்களா? - திடீரென வைரலாகும் புகைப்படம்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் கடந்த வார டிஆர்பியில் டாப்பில் வந்து தமிழகத்தின் நம்பர் 1 சீரியல் என்ந பெருமையை பெற்றது எதிர்நீச்சல்.

கோலங்கள் தொடருக்கு பிறகு திருச்செல்வம் அவர்கள் இயக்கியுள்ள இந்த தொடர் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தொடராகும்.

ஆணாதிக்கம் உள்ள குடும்பத்தில் மருமகள்களாக சென்றவர்கள் எப்படி தங்களது உரிமையை பெருகிறார்கள் என்பதை தொடர் காட்டி வருகிறது.அண்மையில் ஆதிரை-கரிகாலன் திருமணம் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் சீரியல் பிரபலங்கள் நடிகை தேவயானி மற்றும் வடிவுக்கரசியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அவர்கள் இருவரும் சீரியலில் ஒரு நிகழ்ச்சிக்காக என்ட்ரீ கொடுக்கிறார்களா அல்லது TRP டாப்பில் வந்ததால் சீரியல் குழு தனியாக கொண்டாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களா என தெரியவில்லை.


Advertisement

Advertisement