• Jul 25 2025

போதை ஊசி போட்டாரா கார்த்திக்? அந்த படம் தோல்விக்கு இந்தப் பிரச்சினைதான் காரணமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  நவரச நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக். அதனை தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து 80ஸ், 90ஸ்களின் கனவு நாயகனாக வலம் வந்தார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த கார்த்திக் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பெற்றார். அலைகள் ஓய்வதில்லை பட வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடித்து வந்த கார்த்திக் பெரும்பாலும் தோல்விகளையே சந்தித்து வந்தார். அதனால் ரசிகர்களை அவரால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

அதனை தொடர்ந்து தான் கார்த்திக் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த பாடகராகவும் கார்த்திக் வலம் வந்தார். அவர் நடித்த அமரன் படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடலை முதன் முதலில் பாடி பின்னனி பாடகராக மாறினார் கார்த்திக். இந்தப் பாடல்தான் தமிழ் சினிமாவின் முதல் காணா பாடலாகும்.

இந்த நிலையில் கார்த்திக் நடிப்பில் வாசு இயக்கத்தில் வெளிவந்த படம் சீனு. இந்தப் படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். சமீபத்தில் சீனு படத்தை பற்றி மாணிக்கம் நாராயணன் ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். ஒரு மலையாள படத்தின் டப்பிங் தான் இந்த சீனு படமாம். மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம்.

இதை தமிழில் எடுக்கிறேன் என்று வாசு வந்ததாகவும் மொத்தமாக சோலியை முடிச்சுட்டான் எனவும் கார்த்தில் படமுழுக்க drug ஊசியை போட்டே என்னை சாகடிச்சான் எனவும் கூறினார். மேலும் படம் சரியான குப்பை படம் என்றும் மாணிக்கம் நாராயணன் கூறினார்.


Advertisement

Advertisement