• Jul 25 2025

அந்த விஷயத்தை இப்போ வெளில சொல்லனுமா?- சிவகார்த்திகேயன் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.தற்போது அயலான் படத்தின் ரிலீஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயனை பற்றி சமீபகாலமாக வரும் செய்திகள் மனதை பதறவைத்து விட்டன. இது உண்மையா என அவரை சார்ந்த ரசிகர்கள் மிகவும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டனர்.


சிவகார்த்திகேயன் தனக்கு பெரிய துரோகத்தை செய்துவிட்டார், அதை வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இசையமைப்பாளர் டி. இமான் அண்மையில் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

சிவகார்த்திகேயன் பெயரை இந்த சர்ச்சை பெரிய அளவில் டேமேஜ் செய்துவிட்டது என பலரும் கூறி வருகிறார்கள். இருப்பினும் அவர் இது பற்றி எந்த வித விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.இந்நிலையில் தற்போது நடிகை அனுபரமி அளித்திருக்கும் ஒரு பேட்டியில் சிவகார்திகேயன் சர்ச்சை பற்றி பேசி இருக்கிறார்.


சிவகார்த்திகேயன் அந்த விஷயத்தை செய்தாரா இல்லையா என்பதே இன்னும் கேள்விக்குறியாக இருக்கிறது. சொன்னால் தனது குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் சொல்கிறார். சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் இதை பற்றி கேட்டால் என்ன நினைப்பார்கள்.இவ்வளவு காலம் கழித்து அவர் ஏன் இதை வெளியில் சொல்ல வேண்டும், அவரை யாரோ தூண்டி விட்டிருக்கிறார்கள்.


சிவகார்த்திகேயன் சினிமா நடிகர் என்பதால் இதை பெரிதாக பேசுகிறார்கள். மனிதன் என்றால் தவறு செய்வது சகஜம்தான், அதற்காக அதை வெளியில் சொல்லி ஏன் அசிங்கப்படுத்தவேண்டும். அந்தரங்கத்தை வெளியில் சொல்லாமல் விட்டிருக்கலாம் என அனுபரமி கூறி இருக்கிறார்.   


Advertisement

Advertisement