• Jul 26 2025

பிக்பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிட்டதற்கு இத்தனை லட்சமா? வெளியேறிய வினுஷா, யுகேந்திரனின் சம்பள விபரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தற்போது மேலும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிது. எனினும் அனன்யா ராவ், பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர்.

மேலும், பிக்பாஸ் வரலாற்றில் இம்முறை  மேலும் ஐந்து பேர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.


இந்த நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய வினுஷா மற்றும் யுகேந்திரனின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'பாரதி கண்ணம்மா' சீரியல் மூலம் பிரபலமான வினுஷா தேவி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் பிக்பாஸ் வீட்டில் சும்மாவே இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20000 சம்பளம் பேசப்பட்டதாம். அதன்படி 28 நாளைக்கும் வினுஷாவிற்கு 5 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.


அதேவேளை, பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும் நடிகருமான யுகேந்திரனுக்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரம் படி 28 நாளைக்கும்  7 லட்சத்து 56 ஆயிரம் மொத்தமாக சம்பளமாக பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதேவேளை,  இதை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போலவே 28 நாள் மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருந்த வினுஷாவுக்கு இவ்வளவு சம்பளமா என கலாய்த்து வருகின்றனர்.

Advertisement

Advertisement