• Jul 25 2025

ஜனனி - அமுதவாணன் இடையே நடந்த வாக்குவாதம்-இது தான் பிரச்சனையா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி  தற்போது 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஜிபி முத்து சொந்த காரணங்களுக்காக பாதியிலேயே வெளியேறினார்.


வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் தோன்றி கடந்த வார செயல்பாடுகள் பற்றி ஹவுஸ்மேட்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ஜனனி, அமுதவாணனின் பகடைக்காயாக செயல்படுகிறாரா? என விக்ரமனிடம் கேட்டார் கமல்ஹாசன். அப்போது, ஸ்வீட் கடை டாஸ்க்கில் ஜனனியை விளையாட அனுமதிக்காமல் பாதுகாப்பதாக சக போட்டியாளர்கள் அமுதவாணன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது, தான் யாருடைய கைப்பாவையாகவும் செயல்படவில்லை என ஜனனி தெரிவித்திருந்தார்.


இவ்வாறுஇருக்கையில், அமுதவாணனுடன் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அமுதவாணன்,"நான் என்ன உன்னை பிடித்து வைத்துக்கொண்டா இருக்கிறேன்?" என ஜனனியின் கேட்கிறார். இதற்கு " நீ என்னை பிடிச்சு வச்சிட்டா இருக்க? எனக்கு விருப்பம் என்றால் நான் மற்றவர்களோடு பேசப்போகிறேன்" என்கிறார் ஜனனி.


இதனைத் தொடர்ந்து பேசிய அமுதவாணன்,"எல்லாரும் தான் வேலைபாக்குறோம். அப்புறம் நான் உன்னை புடிச்சு வச்சிருக்கேன்னு சொல்றாங்க. பகடைக்காயா யூஸ் பண்றேன்னு சொல்றாங்க" என்கிறார். இதனை மறுத்த ஜனனி, "நீங்கள் என்னை யாரிடமும் பேசக்கூடாது எனச் சொல்லவில்லை" என்கிறார்.


Advertisement

Advertisement