• Jul 26 2025

குடும்பத்தை பிரிக்க திட்டமிடும் அர்ஜீனின் குடும்பம்...வெடிக்கும் சண்டை...தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வசு வீட்டில் நடக்கும் விஷயங்களை சரஸ்லதிக்கு கூறுகின்றார்.இதனை அர்ஜீனின் அக்கா ஒழிந்து நின்று கேட்டு விட்டு அவரின் தாயிடம் கூறுகின்றார்.

இதன் பின்னர் வசு குழந்தைக்கு பெயர் வைக்கனும் என்று கார்த்தியிடம் கூற அதை நீயே டிசைட் பண்ணு என சொல்கின்றார்.அதற்கு வசு உனக்கும் இந்த குழந்தைக்கும் எந்த சம்மந்தம் இல்லையா...தமிழ் மாமா மாதிரி நடந்து கொள் எனக் கூறியதும் கார்த்தி கத்தி சண்டை பிடிக்கின்றார்.

இதனை கீழே இருக்கும் குடும்பஸ்தவர்கள் அனைவரும் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இதன் பின் கார்டின் ஏரியாவிற்கு வசுவை கோதை வரவழைக்கின்றார். வசுவும் நடந்த அனைத்தையும் கூறுகின்றார்.நீங்கள் பேசினால் இது பெரிய சண்டை வரும் நீங்க பேசாதீங்க என வசு கூறுகின்றார்.

இதன் பின்னர் அர்ஜீனின் அக்கா வசு தினமும் சரஸ்வதியிடம் பேசுகிறாள்.அத்தோடு நீங்க சொன்ன மாதிரியே நான் பேசுறேன் என வசு சொன்னாள் எனக் கூறுகின்றார்.அதற்கு கோதை நம்ப மறுக்க தனது கணவன் மீது சத்தியம் செய்து நான் சொன்னது உண்மை தான் எனக் கூறுகின்றார்.


Advertisement

Advertisement