• Jul 23 2025

சரஸ்வதி முதலாளியுடன் பழகுவதைப் பார்த்து சந்தேகப்படும் தமிழ்- ராகினியை வைத்து அர்ஜீன் செய்த தில்லாலங்கடி வேலை

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடைபெறவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழ் சரஸ்வதியை படம் பார்ப்பதற்காக கூட்டிட்டுச் செல்லதற்காக நமச்சியிடம் சொல்லி விட்டு அவசர அவசரமாக வருகின்றார். னால் சரஸ்வதி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் கடை பூட்டி இருப்பதால் வீட்டுக்குச் செல்கின்றார். அங்கும் சரஸ்வதி இல்லாததால் எங்க தான் போயிருப்பா என்று யோசிக்கின்றார்.


மேலும் சரஸ்வதி தமிழிடம் பேசுவதற்காக போன் பண்ண தமிழ் போனை எடுக்காததால் சரி நேராகவே போய் பார்க்கலாம் என்று தான் வேலை செய்யும் கடைக்காரருடன் பைக்கில் வருகின்றார். இந்த நேரம் பார்த்து தமிழ் கடையில் நின்று கொண்டிருக்க அங்கிருப்பவர்கள் சரஸ்வதியின் நடவடிக்கைகள் சரி இல்லை என்று தமிழை ஏற்றி விடுகின்றனர்.

இதனால் கடுப்பான தமிழ் சரஸ்வதியைக் கண்டதும் திட்டுகின்றார். இது ஒரு புறம் இருக்க நடராஜன் அர்ஜுன் கத்திக் குத்து வாங்கிய இடத்திற்குச் சென்று பார்வையிட்டதோடு அதற்கு பக்கத்தில் இருக்கும் ஹொட்டலுக்குச் சென்று சிசி டிவி புட்டேஜ் வாங்கி வந்து அதனை வீட்டில் போட்டு பார்க்கிறார். இதனை ஒழிந்து நின்று அர்ஜுன் பார்த்து விடுகின்றார்.


பின்னர் ராகினியிடம் சென்று நைசாகப் பேசி நடராஜனை வாக்கிங் கூட்டிட்டு போகும் படி சொல்கின்றார். ராகினியும் தன்னுடைய அப்பாவிடம் போய் கேட்க முதலில் மறுப்புத் தெரிவித்த அவர் பின்னர் சம்மதம் தெரிவித்து போகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement