• Jul 23 2025

பிக்பாஸ் பிரபலத்துடன் ஷாலினியின் சகோதரர் காதல்...? நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கையும், ரிச்சர்ட் ரிஷி என்ற சகோதரரும் உள்ளனர். இவர்கள் இருவரும் சினிமாப் பிரபலங்களாக உள்ளனர். அதிலும் குறிப்பாக ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அதேபோன்று ரிச்சர்ட் ரிஷியும் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். இவரும் சிறுவயதில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அஜித்தின் மச்சானான ரிச்சர்ட் ரிஷி பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது காதல் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. 

அதாவது நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமல்லாது முத்தத்திற்கு பின் எடுத்தது என குறிப்பிட்டு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டு இருந்தார் ரிச்சர்ட். 


இவ்வாறாக யாஷிகா உடன் மிகவும் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளதால், இவர்கள் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்களா அல்லது படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். இருப்பினும் இந்த காதல் சர்ச்சைக்கு இரு தரப்பில் இருந்தும் இதுவரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement