• Jul 23 2025

அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் உமாபதிக்கும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிச்சயதார்த்தம்- எப்போது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

2013ம் ஆண்டு விஷாலின் பட்டத்து யானை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன் பின்னர், 2018ல் சொல்லிவிடவா படத்தில் நடித்தார். ஆனால், அந்த 2 படங்களும் பெரிதாக ஓடவில்லை. மேலும், கன்னடத்தில் நடித்த ஒரு படமும் காலை வாரி விட்டது.

 அதன் பின்னர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், கூடிய விரைவில் அவருக்கு திருமணம் என்றும் மாப்பிள்ளை குறித்த ஆச்சரியமான தகவல்களும் வெளியாகியிருந்தன. நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா தான் ஐஸ்வர்யா அர்ஜுனை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக கூறப்பட்டது.


அதாவது  2021ம் ஆண்டில் அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் நடிகர் உமாபதியும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற போது தான் ஐஸ்வர்யாக்கும் அர்ஜுனின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். 


இதனிடையே இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் நிச்சயதார்த்தம் இந்த மாதத்திலேயே அர்ஜூன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் எளிமையாக நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement