• Jul 23 2025

ஹாலிவுட் பாக்ஸ் ஆபிஸை திணற விட்ட லியோ திரைப்படம்- பிரபல நடிகரின் படத்திற்கு வந்த சோதனை

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது லியோ படம். 

இந்தப் படத்தில் பார்த்திபன், லியோ என இருவேறு கெட்டப்புகளில் விஜய் நடித்துள்ள நிலையில், படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.ஆயினும் படம் கடந்த 4 நாட்களில் 405 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாரயிறுதி மற்றும் விடுமுறை நாட்களில் படம் வசூலில் அள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


மேலும் ஹாலிவுட்டில் இந்த வார இறுதியில் மார்ட்டின் ஸ்கோர்செஸியின் தயாரிப்பில் லியோனார்டோ டிகாப்ரியோ, ராபர்ட் டி நீரோ மற்றும் லில்லி கிளாட்ஸ்டோன் ஆகியோர் நடித்தது வெளியான "கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்", திரைப்படம் சுமார் $44 மில்லியன் வசூலுடன் முதல் இடத்திலும், "டெய்லர் ஸ்விஃப்ட் நடிப்பில் உருவாகியுள்ள "தி ஈராஸ் டூர்" $41.5 மில்லியன் வசூல் செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 

இருப்பினும், புதிய வெளியீடுகளில் உலகளாவிய வசூல் அடிப்படையில், தளபதி விஜய் அவர்களின் "லியோ" திரைப்படம் சுமார் $48.5 மில்லியனை (வெளியான நான்கு நாட்களுக்குப் பிறகு) வசூல் செய்து, "கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்" வசூல் செய்ததை விட அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்காவில், "லியோ" படம் பிரத்யங்கிரா சினிமாஸ் மூலம் வெளியிடப்பட்டது மற்றும் வார இறுதியில் $2.1 மில்லியன் வசூல் செய்தது. மேலும் UK மற்றும் அயர்லாந்தில் இது அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியிடப்பட்டது மற்றும் வெளியான முதல் மூன்று நாட்களில் £1.07 மில்லியன் ($1.3 மில்லியன்) வசூலித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement