• Jul 25 2025

எதிர்த்துக் கேள்வி கேட்ட சரஸ்வதி... கம்பெனி விஷயத்தில் தமிழ் எடுத்த அதிரடி முடிவு... சவாலிற்கு சம்மதித்த அர்ஜுன்... ப்ரோமோ வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடர், அந்த சேனலின் முன்னணி தொடர்களில் ஒன்றாக அமைந்துள்ளது. டிஆர்பியிலும் முதல் பத்து இடங்களில் இந்தத் தொடர் முன்னணியில் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அதில் தமிழும் சரஸ்வதியும் பைக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் அர்ஜுன் "தமிழ் மாம்ஸ், வாங்க மாம்ஸ், உங்க கூட பேசணும்" எனக் கூப்பிடுகின்றார். 


உடனே பைக்கை விட்டு இறங்கிய சரஸ்வதி "உனக்கு என்னடா வேணும்" என அர்ஜுனை எதிர்த்துக் கேள்வி கேட்கின்றார். பின்னர் தமிழிற்கு அருகில் சென்று "திடீரென்று பதவி ஆசை வந்து விட்டதா..?" எனக் கேட்கின்றார். அதற்கு தமிழ் "எனக்காக இல்லாவிட்டாலும் என் தொழிலாளர்களுக்காக நிற்பதற்காக நான் முடிவு பண்ணிட்டேன்" என்கிறார்.


நீங்க போட்டியில் இறங்கினாலும் எப்பிடியும் தோற்க தான் போறீங்க என அர்ஜுன் கூற, கண்டிப்பா நான் ஜெயிச்சிடுவேன் என ஆணித்தரமாக நம்புகிறேன் எனதமிழ் பதிலளிக்கின்றார். மேலும் அர்ஜுன் "அப்படி ஜெயிக்க முடியல என்றால் கம்பெனியை இழுத்து மூடி விட்டு இந்தத் தொழிலை விட்டே போயிடுறேன்" என்கிறார். 

அதற்கு தமிழ் "நான் ஜெயிசிட்டால் அந்த கம்பெனியை விட்டிற்றே நீ ஓடிடணும்" என்கிறார். அர்ஜுனும் சவாலிற்கு சம்மதிக்கின்றார். 


Advertisement

Advertisement