• Jul 24 2025

தமிழை ஜெயிக்க வைத்தது மாமா தான் என்று அறிந்த அர்ஜுன்- சரஸ்வதி கொடுத்த சர்ப்ரைஸ்- மகிழ்ச்சியில் இருக்கும் நமச்சி

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொணடிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழை சேர்மன் பதவியில் இருத்துவதற்காக கோதையும் வந்திருக்கின்றார். கோதை தமிழுக்கு கைகொடுத்து வரவேற்றதோடு அவரை சேர்மன் சேரில் இருத்தி பதவியில் அமர்த்துகின்றார். பின்னர் கோதையை ஏதாவது பேசச் சொல்லில் சொல்ல கோதை சில பேர் தங்கள் மீது சந்தனத்தை பூசுவதற்காக என் மேல சேறு அடிச்சிட்டாங்க என்று தமிழைக் குத்திப் பேசுகின்றார்.


தொடர்ந்து பேசிய தமிழ் என்கிட்ட நேர்மை இருக்கு, யார் மீதும் நான் சேறு பூசல் போராடித் தான் பதவிக்கே வந்தேன். இந்த நேர்மை என்னை பெத்தவங்க கிட்ட இருந்து வந்தது யாரும் யாரையும் தரக் குறைவாகப் பேச வேணாம் என்று சொல்லி கோதைக்கு பதிலடி கொடுக்கின்றார்.

பின்னர் தமிழ் ரூமுக்குள் இருக்க அங்கு வரும் அர்ஜுனை நமச்சி நக்கலடிக்க அர்ஜுன் சத்தம் போட தமிழ் அர்ஜுனைத் திட்டி அனுப்புகின்றார்.நான் சொன்ன மாதிரி பதவிக்கு வந்திட்டேன். மரியாதையாக கம்பனியை விட்டு ஓடிடி என்று சொால்கின்றார். இதைக் கேட்டு அர்ஜுன் கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகின்றார்.


பின்னர் அர்ஜுன் ஒருவரை சந்தித்து எங்களுக்கு ஓட்டு போடுறன் என்று சொல்லிட்டு கடைசில இப்படிப் பண்ணிட்டீங்களே எனக் கேட்க அவர் நடேசன் போட்ட வீடியோவைக் காட்டிஇந்த வீடியோவைப் பார்த்து தான் நாங்களே மனம் மாறினோம். இப்ப கூட கோதை தமிழைத் தரக் குறைவாகத் தான் பேசினாங்க, ஆனால் தமிழ் ரொம்ப பொறுப்பா நடந்து கிட்டாரு. அவர் தான் இதுக்கு சரியான ஆளு என்று சொல்லி விட்டு கிளம்புகின்றார்.

பின்னர் தமிழ் பதவி ஏற்றதும் நமச்சி கோதை வீட்டுக்கு முன்னால் வெடி வெடிக்க எல்லோரும் ஓடி வந்து பார்க்க தமிழ் கெத்தாக சரஸ்வதியைக் கூட்டிக் கொண்டு தனது வீட்டுக்கு போகின்றார். இதனைப் பார்த்த எல்லோரும் அதிர்ச்சியடைகின்றனர்.அத்தோடு சரஸ்வதி வீட்டு வாசலில் தமிழின் பதவி பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகையை நமச்சியைக் கொண்டு திறக்கச் சொல்கின்றார். அந்த பலகையை பார்த்ததும் தமிழ் சந்தோசப்படுகின்றார்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement