• Jul 23 2025

'மாமன்னன்' படம் எப்படி உள்ளது..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலினும், ஹீரோயினாக கீர்த்தி சுரேஷூம் நடித்துள்ளனர். அத்தோடு இவர்களுடன் இணைந்து வடிவேலு, ஃபஹத் ஃபாசில், லால் ஆகியோர் நடிக்கின்றனர். 


மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் இன்றைய தினம் (ஜூன் 29) தியேட்டரில் வெளியாகியுள்ளது. பலத்த விமர்சனங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் வெளிவந்த இப்படம் குறித்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

அந்தவகையில் படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "மாரி செல்வராஜ் கலைஞரின் பேரனாக வேண்டும் என்ற கனவு இன்னும் அதிகமாக எதிர்பார்ப்பது போல் உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


மேலும் ஒருவர் கூறுகையில் "இப்படம் வடிவேலுவின் புதிய பரிமாணம், உதயநிதியின் நடிப்பு நன்றாக உள்ளது, அருமையான பாடல்கள், வசனங்கள். குட் மேக்கிங்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதேபோன்று மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு முதலமைச்சரும் ஒரு ரசிகனாக மாறி பாராட்டி இருக்கின்றார். இதுகுறித்து மாறி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் "மாமன்னன் படத்தைப் பார்த்து கட்டித்தழுவி கொண்டாடிய மாண்புமிகு முதல்வர் திரு.@mkstalin ஐயா அவர்களுக்கு எங்கள் பெரும் மரியாதை கலந்த நன்றியையும் ப்ரியத்தையும் சமர்பிக்கிறோம் " எனக்குறிப்பிட்டிருக்கின்றார்.


மேலும் மற்றோர் நபர் கூறுகையில் "முதல் பாதி சிறப்பாக இருந்தது, அதைத் தொடர்ந்து 2 வது பாதி நன்றாக இருந்தது. மாமன்னன் படத்தில் அளவற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார் வடிவேலு . கர்ணன் கொடுமையானவன் என்று கண்டவர்களுக்கு மாமன்னன் மிகவும் சுவையாக இருக்கும்.  ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல கடிகாரம்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


மற்றோர் நபர் "படத்தின் முதல் பாதி நன்றாக இருக்கின்றது" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.




இவ்வாறாக மாமன்னன் படமானது பல சிறந்த பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement