• Jul 23 2025

விபத்தில் சிக்கிய அருண் விஜய்; ரெஸ்ட் எடுக்காமல் என்ன செய்கிறார் பாருங்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி கொண்டிருப்பவர் தான் நடிகர் அருண் விஜய். இவர் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும், தொடர்ந்து தோல்வி படங்களாவே அமைந்தது. அதன் பின்னர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நட்சத்திரம் அளவிற்கு இவரின் மார்க்கெட்டை  தூக்கிவிட்ட திரைப்படம் என்றால் அது என்னை அறிந்தால் தான்.

இத்திரைப்படத்தில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். அதன் பின்னர் தடம், குற்றம் 23 போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். 

தற்போது இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அச்சம் என்பது இல்லையே'. எம்.ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஐந்து வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க லண்டன் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வந்தது. 

இப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகளில் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டது. அதனை சமீபத்தில் தெரிவித்த அருண் விஜய் தற்போது அந்த காயத்திற்கு கேரளாவில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் அவரின் உடல் நலம் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர் தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் உடற் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 

இது குறித்த வீடியோவை ஒன்றை தனது இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement