• Jul 23 2025

காதல் சொட்டச் சொட்ட சினேகா - பிரசன்னா தம்பதியினர் வெளியிட்ட காதலர் தின ஸ்பெஷல் போஸ்ட்!!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சினேகா- பிரசன்னா இருவரும் செலிபிரிட்டி தம்பதி என்றே சொல்லலாம் . இவர்கள் பல ஆண்டுகள் காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நடிகை சினேகா தொடர்ந்து தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக பணியாற்றி வந்தார். தற்பொழுது சில திரைப்படங்களிலும் நடித்தும் வருகிறார்.

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்கள் தங்கள்  குடும்பம், குழந்தைகளுடன் எடுத்த புகைப்படங்கள், போட்டோஷூட்களை அடிக்கடி ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வர்.

இந்நிலையில்  காதலர் தினத்தை முன்னிட்டு, சினேகா தனது இன்ஸ்டாகிராமில், ’15 ஆண்டுகள் ஒன்றாக இன்னும் நிறைய’.. என்று பிரசன்னாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அதேபோல பிரசன்னாவும், சினேகா உடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து “அவள் எனக்கான ஒருத்தி மட்டுமல்ல. அவள் என்னவள், என் வீடு, என் இதயம், என் ஆன்மா, என் கூடு மற்றும் மற்ற அனைத்தும். காதலர் தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement