• Jul 25 2025

ஆர்யா - சாயிஷாவின் மகள் ஆரியானாவா இது.? தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தில் நடித்த நடிகை சாயிஷா மீது காதலில் இருந்து இரு வீட்டார் சம்மதத்தோடு கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா.

எனினும் இதற்கு முன் தனக்கு திருமணத்திற்காக பெண் பார்க்கும், எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். அந்நிகழ்ச்சியில் இறுதி வரை வந்த மூன்று பெண்களை கூட அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றினார்.

அதன்பின்னர்  வெளிநாட்டு பெண்ணிடம் பண மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கினார். எனினும் இதற்கிடையில் கொரோனா தொற்று  காலக்கட்டத்தில் 2021ல் ஆரியானா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆர்யா - சாயிஷா.

சமீபத்தில் தன் மகளின் புகைப்படத்தை வெளியில் காட்டியிருந்தார் சாயிஷா.அதற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ்கள் கிடைத்தது.

எனினும் தற்போது இரண்டு வயதை எட்டவிருக்கும் மகள் ஆரியானாவின் புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். புகைப்படத்தை பார்த்து இப்படி வளர்ந்துட்டாங்களே என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.





Advertisement

Advertisement