• Jul 25 2025

அப்படி என் பொண்ணு வாழனும் என்று அவசியமில்லை- த்ரிஷா நிச்சயதார்த்தம் நின்று போனது குறித்து ஓபனாக பேசிய அவரது அம்மா

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். 20 வருடங்களுக்கு மேலாக சினிமாத்துறையில் இருக்கும் இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கின்றார்.

தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இப்போது அவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருக்கிறார். இப்படத்தின் ப்ரைமோஷன் நிகழ்ச்சியில் உங்கள் திருமணம் எப்போது என்று கேட்டபோது என்னுடைய உயிர் மக்களிடம் என்று தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் அண்மையில் த்ரிஷாவின் அம்மா அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் பேசும்போது, வருணுடன் த்ரிஷாவின் நிச்சயதார்த்தம் முடிந்தது குறித்து நிறைய விஷயங்கள் எழுதுகிறார்கள், ஆனால் உண்மை என்பது எங்களுக்கு தான் தெரியும்.

த்ரிஷா சினிமாவில் நடிக்கிறார் என்று தெரிந்து தான் பெண் பார்க்க வந்தார்கள். பின் எல்லாம் தெரிந்து தானே நிச்சயம் செய்தார்கள். கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என்று செய்தார்கள். வருண் என்கரேஜ் செய்து கொண்டிருந்தார். அதுதான் உண்மை.


த்ரிஷா கல்யாணம் நின்று போன விஷயத்தில் பெரியவங்க பல பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய பேர் இன்வால்வாகி இருக்கிறார்கள்.ஒத்து வராத விஷயங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்கொண்டு வாழுறது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. சில விஷயங்கள் சரிப்பட்டு வரலை என்றால் பிரிந்து விடுவது தான் பெட்டர் என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement