• Jul 25 2025

தமிழகத்தின் பிரசித்திபெற்ற அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த ஆர்யா பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் துஷாரா விஜயன். இதனை தொடர்ந்து இயக்குநர் வசந்த பாலன் இயக்கும் அநீதி திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

திண்டுக்கலைச் சேர்ந்த நடிகை துஷாரா விஜயன் குறைவான திரைப்படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தவர். இந்நிலையில்தான் நடிகை துஷாரா விஜயன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில், மாசி பெருந்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இப்பகுதியின் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். 


பக்தர்கள் பலரும் கோவிலுக்கு வந்து மாவிளக்கு, கரும்புத் தொட்டில், பொங்கல் வைப்பது என தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் ஏறுதல் மற்றும் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது.இந்நிலையில்தான் துஷாரா விஜயனும் சாமி தரிசனம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement