• Jul 24 2025

"பொறுப்பான அப்பா"- தனது குழந்தைக்கு தாலாட்டுப் பாடும் அஜய் கிருஷ்ணா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தனது வசீகர குரல் மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி கொண்டவர் தான் அஜய் கிருஷ்ணா. ஜெஸ்ஸி என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.சில மாதங்களுக்கு முன், தனது பிறந்த நாளில் தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடனும் பகிர்ந்து இருந்தார் 


தொடர்ந்து கர்ப்பமாக இருக்கும் தனது மனைவி ஜெஸ்ஸியுடன் இணைந்து போட்டோ சூட் நடத்திய புகைப்படங்களையும்  சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டு இருந்தார் அஜய் கிருஷ்ணா.  இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகின.


அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி தம்பதியர் குழந்தை பெற்றுக் கொண்டது குறித்த தகவலையும் வெளியிடுவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.இந்த தம்பதிக்கு கடந்த 12ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.


தனது மனைவி ஜெஸ்ஸி கர்ப்பமாக இருந்த சமயத்தில் எடுத்த ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்து அஜய் கிருஷ்ணா, "பிப்ரவரி 12ஆம் தேதி நாங்கள் அதிகாரப்பூர்வமாக எங்கள் குட்டி மகனுக்கு பெற்றோராகி விட்டோம்" என மகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.மேலும், தங்கள் மீது அன்பும், அக்கறையும் காட்டிய அனைவருக்கும் நன்றிகளையும் கூறியிருந்தார் அஜய் கிருஷ்ணா. இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி இருந்தனர்.


இந்நிலையில் ஜெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடகர் அஜய் கிருஷ்ணா தங்களது குழந்தைக்கு தாலாட்டு பாடும் வீடியோவை "பொறுப்பான அப்பா" என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement