• Jul 25 2025

பருத்திவீரனைப் போல் களம் இறங்கும் ஆர்யா.. கதை சொல்லும் போதே கண்ணீர் விட்டு அழுத சம்பவம்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஆர்யா பல வெற்றி படங்களை கொடுத்து இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகாமல் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். 

கடந்த வருடம் வெளிவந்த கேப்டன் திரைப்படம் சரியான மொக்கை படமாக இவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதற்குப் பிறகு அடுத்த படத்தின் மூலம் வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்று முழு முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இந்நிலையில் முத்தையா இயக்கத்தில் ஆர்யா, காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் கமிட்டாகி இருக்கிறார். பொதுவாகவே முத்தையா இயக்கும் படங்கள் எல்லாமே கிராமத்து படமாக தான் இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த விருமன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதே மாதிரி ஆர்யா நடிக்கும் இப்படமும் முழுக்க முழுக்க கிராமத்துக் கதையை சார்ந்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான டீசர் வெளிவந்தது. இதை பார்க்கும் பொழுது நம்முடைய ஞாபகம் எல்லாமே பருத்திவீரன் படத்தின் பக்கம் தான் திரும்புகிறது. அதே சாயலில் தான் ஆர்யாவும் களம் இறங்கி இருக்கிறார். எப்படி பருத்திவீரன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் பொழுது எல்லாரும் கண்ணிலும் கண்ணீர் வந்ததோ அதே மாதிரி இப்படத்தையும் பார்ப்பவர்கள் கண்ணீர் விட்டு அழுகிற சம்பவம் இருக்கிறது.

ஆனால் இப்படத்தின் கதையை ஆர்யாவிடம் சொல்லும் போதே முத்தையா கண்ணீர் விட்டு அழுது கொண்டே தான் முழு ஸ்கிரிப்டையும் சொல்லி இருக்கிறார். அந்த அளவிற்கு இப்படத்தில் ஏதோ ஒரு தரமான சம்பவம் இருக்கிறது. அத்துடன் இயக்குனர் முத்தையா படம் எந்த அளவிற்கு கிராமத்துக் கதையாக இருக்குமோ அதே அளவிற்கு சண்டைக் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதற்கேற்ற மாதிரி ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் பொழுதே வெறித்தனமாக தான் தெறிக்க விட்டிருக்கிறார்.

Advertisement

Advertisement