• Jul 26 2025

சுந்தர் பிச்சையின் சென்னை வீட்டை வாங்கிய பிரபல தமிழ் நடிகர்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சுந்தர் பிச்சையின் சென்னையிலுள்ள வீட்டினை பிரபல தமிழ் நடிகர் வாங்கி இருக்கும் நிலையில் தற்போது இந்த விடயம் சோசியல் மீடியாவில்  வெளியாகி உள்ளது. அதாவது கூகுள் நிறுவனத்தின் CEO-வாக பணியாற்றி வருபவர் தான் சுந்தர் பிச்சை இவர் சென்னையை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவருடைய வீடு சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் இருக்கும் நிலையில் பல வருடங்களுக்கு ஒரு முறை தன்னுடைய வீட்டை வந்து பார்த்துவிட்டு செல்வார்.

எனினும் சமீபத்தில் கூட தன் வீட்டை பார்ப்பதற்காக சென்னை வந்திருந்தார். சுந்தர் பிச்சை சென்னையை சேர்ந்தவர் என்றாலும் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதனால் அமெரிக்காவில் முழுமையாக செட்டில் ஆகிவிட்டார். எனவே இதன் காரணத்தினால் மிகவும் குறைவாகவே சென்னை வருகிறார்.


இவ்வாறுஇருக்கையில்  பிறந்து வளர்ந்த வீடு சென்னை அசோக் நகர் பகுதியில் இருக்கும் நிலையில் அவர் தனது 20 வயது வரையிலும் அந்த வீட்டில் வாழ்ந்துள்ளார். எனினும் தற்பொழுது சுந்தர் பிச்சை அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால் சென்னையில் இருக்கும் வீட்டை விற்று விடலாம் என தனது அப்பாவிடம் கூறினாராம்.

எனவே சுந்தர் பிச்சையின் பேச்சை தந்தையும் தட்டாமல் விற்க முடிவு செய்துள்ளார்கள். இவ்வாறுஇருக்கையில் தற்பொழுது அந்த வீட்டை நடிகரும் தயாரிப்பாளருமான சி.மணிகண்டன் என்பவர் வாங்கியிருக்கிறாராம். எனவே அந்த வீட்டை இடித்து விட்டு புதிதாக அந்த இடத்தில் வீடு கட்டப் போகிறாராம் எனவே அந்த வீட்டை இடிப்பதற்கான பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement