• Jul 24 2025

என்கிட்ட இந்த பாச்சாலாம் பலிக்காது திருப்பி அடித்த அசீம்!- விக்ரமனை பங்கமாக கலாய்த்த அமுதவாணன்!- நடந்தது என்ன?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் 88ம் நாளில் நடந்தது என்ன என்று பார்ப்போம். அதாவது Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது.

 நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.தொடர்ந்து Ticket To Finale டாஸ்க்கில் விக்ரமன் விளையாட்டுத் திறனை பற்றி ADK பேச, அதன் பின்னர் ஷிவின் பேசும் விஷயம், தற்போது அதிக வைரலாகி வருகிறது.


விக்ரமன் குறித்து பேசும் ADK, "ஆனா, நீங்க சரியான ஸ்ட்ராங் விக்ரமன். Will Power அதிகம் உங்களுக்கு. நம்ம என்ன நெனச்சோம். அவரு டாஸ்க் ஆட மாட்டாரு. ஒழுங்கா டாஸ்க்ல பங்கெடுக்க மாட்டாருன்னு எல்லாம் சொன்னோம். பாருங்க அடிச்சு விளையாண்டாரே. நல்லா ஆடுனாரு டாஸ்க்ல" என தெரிவிக்கிறார்.

இதற்கு பதில் சொல்லும் ஷிவின், "அப்படி எல்லாம் இருந்தாங்கன்னா போய்டுவாங்க கெளம்பி. இந்த சீசன்ல எல்லாரும் சமமான போட்டியாளர் தான். அதுனால தான் இவ்ளோ தூரம் இருக்கோம் எல்லாரும்" என தெரிவிக்கிறார்.தொடர்ந்து எல்லா கேமிலும் சிறப்பாக விளையாடி முதலிடத்தில் இருக்கும் அமுதவாணனுக்கு Ticket To Finale வழங்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் அனைவரும் செம குஷியில் இருந்தனர்.


இதனைத் தொடர்ந்து  BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் .இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாகி இருந்தது.

இதில், விக்ரமனுக்கு அநியாயத்தை கண்டால் பொங்கும் விருதும், ஷிவினுக்கு விஷ பாட்டில் விருதும் கொடுக்கப்பட்டுள்ளது.தொடர்ந்துபூமர் அங்கிள் கிரீடத்தை அமுதவாணன் விக்ரமனுக்கு கொடுத்திருக்கிறார். உங்களின் புரிதல் தவறு என்பதால், இந்த கிரீடத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் நீங்கள் கொடுத்ததால் இதை தலையில் மாட்டிக்கொள்கிறேன்.


பெண்ணுனா இந்த வேலைதான் பார்க்க வேண்டும் என்று சொல்லுவது, பையன் என்றால் அழக்கூடாது என்று சொல்லுவது எல்லாமே பூமர் அங்கிள் கணக்கில் தான் வரும். இப்படி நீங்க சொல்லும் எல்லாத்திற்கும் எதிரானவன் நான். இருந்தாலும் நீங்கள் கொடுத்த மரியாதைக்காக இதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நான் பூமர் அங்கிள் இல்லை ஐம் மார்டன் என்றார் என்று அமுதவாணனின் முகத்திற்கு நேராகவே பேசினார் விக்ரமன்.

அசீமுக்கு கிரிஞ்ச் அவார்டு கொடுத்தார் விக்ரமன். தொடர்ச்சியாக எல்லோரையும் டிரிக்கர் செய்து விளையாடுவது கிரிஞ்சாக தான் இருக்கிறது என விளக்கம் கொடுத்தார் ஆனால் அதனை ஏற்காமல் மேடையில் இருந்து இறங்கும் அசீம், உங்களுக்கு அப்படி கிரிஞ்சா தெரிஞ்சா அத நீங்களே மாட்டிக்கோங்க. இதெல்லாம் நீங்க வேற ஆள்கிட்ட பேசலாம், என்கிட்ட இந்த பாச்சாலாம் பலிக்காது. இத அப்படி நீங்களே மாட்டிக்கோங்க. சப்பைக்கும் கிரிஞ்சுக்கும் நீங்க தான் என சூடாகினார் அசீம். இதற்கு விக்ரமன் விளக்கம் கொடுக்க வந்தாலும் அவரை பேசவிடாமல் வழக்கம்போல தனது அதிரடியை காட்டினார். தொடர்ந்து அசீம் குறித்து விக்ரமன் மற்றும் ஏடிகே பேசிட்டு இருக்கும் போது இந்த எப்பிஷோட்டானது முடிவடைகின்றது.

Advertisement

Advertisement