• Jul 25 2025

பிக்பாஸ்-கிட்ட அசீம் வச்ச கோரிக்கை.. டாஸ்கில் வந்த டுவிஸ்ட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இவ்வாறுஇருக்கையில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். 

மேலும் அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.

இதனிடையே, Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. உதாரணத்திற்கு லுங்கி மாற்றம் பனியன் அணிந்தபடி இருக்க வேண்டும் என்றும், தலை சீவாமல் இருக்க வேண்டும் என்றும் அசிமிடம் பிக் பாஸ் கூறியிருந்தார்.



இதனால் லுங்கி மற்றும் பனியன் காஸ்டியூம் உடன் வீட்டுக்குள் இருக்கிறார். இந்நிலையில், தனது உடையை மாற்றும்படி பிக்பாஸ்-க்கு கோரிக்கை வைத்திருக்கிறார் அசீம்.



பிக்பாஸிடம் இதுகுறித்து பேசும் அசீம்,"கதிருக்கு எல்லாம் ஷூ-வை பெயிண்ட்ல முக்க சொல்லிடீங்க. நீங்க சொல்லுங்க. என்கிட்ட இருக்க எல்லா ஷூவையும் முக்கிடறேன். ஆனா இது ரொம்ப வித்தியாசமா இருக்கு பிக்பாஸ். ப்ளீஸ் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி பழையபடி பண்ண சொல்லுங்க பிக்பாஸ். அத்தோடு ஒருவாரம் தான் இருக்கு. நீங்க எந்த sacrifice டாஸ்க் குடுத்தாலும் நான் பண்ணுவேன். அது உங்களுக்கே தெரியும். இந்த காஸ்டியூம் ரொம்ப ஒரு மாதிரி இருக்கு. பழைய காஸ்டியூம் கொடுக்க சொல்லுங்க பிக்பாஸ். இன்னைக்கு முழுவதும் இந்த ட்ரெஸ் போடுறேன். நாளைக்கு பழைய காஸ்டியூம் கொடுக்க சொல்லுங்க பிக்பாஸ். இது என்னோட ரெக்வஸ்ட்" என்கிறார்.


Advertisement

Advertisement