• Jul 25 2025

பிக் பாஸ் குரலில் பேசி என்ட்ரி கொடுத்த மணி! செம குஷியில் ஹவுஸ்மேட்ஸ் - வெளியானது ப்ரோமோ

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில் விறுவிறுப்பாக செல்கின்றது.21 போட்டியாளர்களில் தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன், ஷிவின், ஏடிகே, கதிரவன் உள்ளிட்ட 7 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். 

தற்போது, ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மணிகண்டன் என்ட்ரி கொடுத்துள்ளதாக இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இவ்வாறு என்ட்ரி கொடுத்த மணிகண்டன் , ''எல்லோரும் கார்டன் எரியாவுக்கு வாங்க ,ஒரு VIP வற போறாரு ,எல்லோரும் ராஜ மரியாதையோட வரவேற்கோணும்'' என்று  பிக் பாஸ் குரலில் பேசி அசத்தியுள்ளார்.இந்த குரலை கேட்ட மைனா மணி வாய்ஸ் என்று கண்டுபிடித்தார் .

அவரை கண்ட ஹவுஸ் மேட்ஸ் சந்தோஷத்துடனும்,ஆரவாரத்துடனும் பூ தூவி வரவேற்றுள்ளனர்.இது இன்றைய ப்ரோமோவாக அமைந்துள்ளது.



Advertisement

Advertisement