• Jul 26 2025

இந்துக் கடவுளை அவமதித்த பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர்... 5பிரிவுகளின் கீழ் அதிரடி வழக்குப் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்து வருபவர் விடுதலை சிகப்பி. இவர் சென்னை அபிராமபுரத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக புகார் ஒன்று எழுந்தது. 


இதனையடுத்து இது குறித்து பாரத் இந்து முன்னணி அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்து கடவுளை இழிவுப்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த இந்தப் புகாரின் அடிப்படையில் விடுதலை சிகப்பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

அதாவது கலகத்தை தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement