• Jul 26 2025

+2 தேர்வில் தேவயானியின் மகள் எடுத்த மதிப்பெண் எத்தனை தெரியுமா..? குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய ஒரு முக்கிய நடிகை தான் தேவயானி. காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் கமலி என்ற வேடத்தில் நடித்த இவர் இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். மேலும் அழகான புடவை, தாவணியில் நடித்திருந்தாலும் உச்ச நடிகையாக உயர்ந்திருக்கின்றார்.


இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே இயக்குநர் ராஜகுமார் மீது காதல் வயப்பட்டு வீட்டை எதிர்த்து 2001ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இத்தம்பதியினருக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரண்டு மகள்களும் இருக்கின்றனர். 


இந்நிலையில் இவரின் மூத்த மகள் இந்த வருடம் +2 தேர்வு எழுதி இருக்கின்றார். இதன் பெறுபேறு நேற்று வெளியாகிய நிலையில் தேவயானியின் மூத்த மகள் பெற்ற மதிப்பெண் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.


அந்தவகையில் இவர் 12 ஆம் வகுப்பு தேர்வில் 600க்கு 498 மதிப்பெண்கள் பெற்று இருக்கின்றார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement