• Jul 26 2025

டைட்டானிக் படத்தின் கலெக்சனை தாண்டிய அவதார் 2...மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம்  தான் அவதார்.

இப்படம் உலகளவில் 2.7 பில்லியன் வரை வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இதுவே உலகளவில் அதிகம் வசூல் படம் என்று முதலிடத்தில் உள்ளது.

முதல் பாகத்தை தொடர்ந்து தி வே ஆஃப் வாட்டர் (அவதார் 2) படத்தின் படப்பிடிப்பை 2017-ம் வருடம் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தார் ஜேம்ஸ் கேம்ரூன். 

சமீபத்தில் டிசம்பர் 16 அன்று வெளியானது அவதார் 2.சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

13 ஆண்களுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளிவந்து சுமார் ரூ. 2.1 பில்லியன் மட்டுமே இதுவரை வசூல் செய்துள்ளது.

இதன்முலம் அவதார் முதல் பாகத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்றாலும், டைட்டானிக் படத்தின் வாழ்நாள் வசூலை முறியடித்துள்ளது அவதார் 2.அதுமட்டுமின்றி, உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் பட்டியலிலும் அவதார் 2 இடம்பிடித்துள்ளதாம்.

1. அவதார் 1

2. அவெஞ்சர்ஸ் எண்டு கேம்

3. அவதார் 2

4. டைட்டானிக்

5. ஸ்டார் வார்ஸ் The Force Awakens


Advertisement

Advertisement