• Jul 26 2025

பருத்திவீரன் படத்தில் இந்த சீனை மட்டும் ரெண்டு மூணு தடவை பண்ணோம்! மனம் திறந்த நடிகை பிரியா மணி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் இயக்குநர் அமீர் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் பருத்திவீரன். 

கிராமத்து மண் வாசனையுடன், காதல் கதையை எதார்த்தமாக சொன்ன இந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை பிரியாமணி தேசிய விருது பெற்றிருந்தார்.

இந்த நிலையில், இந்த படம் குறித்த சுவாரசியமான தருணங்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது, ஊரோரம் புளியமரம் பாடலுக்கு பிறகு, கார்த்தி என்னை அடிப்பது போன்ற சீன் வைக்கப்பட்டிருக்கும். அவர் அடித்ததும் சேரும் சகதியும் நிறைந்த ஒரு குழியில் நான் விழுவேன். அது உண்மையிலேயே, ஷூட்டிங்குக்கு 4, 5 நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்டது .


அந்த குழிக்குள் சேறு சகதியோடு வேறு எது வெல்லோமோ கலந்திருந்தது. அந்த சீனை மட்டும் 3,4 தடவை எடுத்தோம். உடல் முழுவதும் சகதியுடன் தான் அந்த காட்சியில் நடித்திருந்தேன். அந்தக் காட்சியை இன்னும் என்னால் மறக்கவே முடியாது என பிரியாமணி உருக்கத்துடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement