• Jul 25 2025

அவன் என் பிள்ளை கலக்குவான்- சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து முத்தமிட்ட நடிகை சங்கீதா- எமோஷனலான வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஷு தமிழில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி நேற்றைய தினம் முடிவடைந்த ரியாலிட்ரி ஷோ தான் டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சியில் நடிகை சினேகா சங்கீதா பாபா மாஸ்டர் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.

எனவே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது பேசிய தொகுப்பாளர் விஜய் சங்கீதாவிடம் சிவகார்த்திகேயன் நடனம் குறித்து கேட்ட போது சில சுவாரஸியமான விடயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது ஜோடியில் சிவகார்த்திகேயன் நடனம் ஆடும் போது சங்கீதா நடுவராக இருந்ததாகவும் சிவகார்த்திகேயன் நடனம் ஆட முடியாது என்று கூறும் போது சங்கீதா அடிக்கடி தட்டிக் கேட்பதாகவும் அவரை ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதனால் சிவா இப்போ டான்ஸ் ஆடும் போது பெருமையாக இருக்கு என்றும் தெரிவித்தார்.

இதனைக் கேட்ட சிவகார்த்திகேயனும் சங்கீதா மேடம் சொன்னது உண்மை தான் நான் என்னுடைய படங்களை பார்க்கும் போதும் கூட மேடத்தை தான் நினைத்து கொள்வேன் என்று கூறியுள்ளார். அத்தோடு சங்கீதா சிவகார்த்திகேயன் தனது பிள்ளை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement