• Jul 24 2025

விஜய்க்கும் எனக்கும் போட்டி தான்... ஆனால் நாங்க...? ஆணித்தரமாக கூறிய அஜித்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் காலத்திற்கு காலம் பல்வேறு திரைப்படங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஆனால் அதேநேரம் முக்கியமாக விஜய்யின் வாரிசு படத்துக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு ரிலீஸாவது இரு தரப்பு ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது.


அந்தவகையில் கடந்த சில தினங்களாகவே எந்த படத்திற்கு அதிகமான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்ற பஞ்சாயத்து சமூக வலைத்தளங்களில் விஸ்வரூபமெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது திரையரங்குகளிற்கு முன் பேனர் வைப்பதிலும் அஜித் - விஜய் ரசிகர்கள் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில் அஜித் முன்பு பேசிய விடயம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிற்து. அதில், விஜய்யுடன் இடம்பெறும் போட்டி குறித்து அஜித் பேசியுள்ளார். அதாவது "எல்லா துறைகள் மாதிரி தான் சினிமாவும். கண்டிப்பா எனக்கும் விஜய்க்கு இடையே போட்டி உள்ளது" எனக் கூறியுள்ளார்.


அத்தோடு "போட்டி அதிகம் இருந்தாலும் கண்டிப்பா நாங்க எதிரிங்க கிடையாது. எங்களுக்குள்ள இருக்குறது வெறும் போட்டி மட்டும் தான்" என ஆணித்தரமாக கூறியுள்ளார் அஜித். அஜித் இவ்வாறு கூறியுள்ளமையை இருதரப்பு ரசிகர்களும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் பொங்கல் போட்டியில் அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு படமும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், தற்போது அஜித் கூறிய இந்த விஷயம் ட்ரெண்டாகி வருவது பலராலும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement