• Jul 25 2025

ஆயிஷா கிட்ட இருக்கு ஆனால் தனலட்சுமி கிட்ட அந்த ரிலேஷன்ஷிப் இல்ல- பிக்பாஸ் ராம் கூறிய முக்கிய விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு மாத காலமே உள்ளது. இதனால் போட்டியாளர்கள் பிக்பாஸினால் வழங்கப்படும் டாஸ்க் எல்லாவற்றையும் கடுமையாக விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம்  வெளியான ராம்,பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்ய கருத்துக்களை ராம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதே போல, அசீம், விக்ரமன் உள்ளிட்டோருடனான நட்பு பற்றியும் நிறைய விஷயங்களை ராம் பேசி இருந்தார்.


ஆயிஷாவுடன் நட்பாக இருக்கும் உங்களுக்கு, தனாவுடன் பிரச்சனையா என நெறியாளர் கேட்க, இதற்கு பதிலளித்த ராம், "தனா எனக்கு பிராப்ளம் எல்லாம் இல்ல. அவங்களுக்கு தான் நான் ப்ராப்ளம். பாக்குறவங்க எல்லாம் அப்படித்தான் நினைச்சுக்கிறீங்கன்னு தோணுது. தனாவுக்கு எனக்கும் பர்சனலா எந்த பிரச்சனையும் இல்லை. என் பக்கத்து ஊரு பொண்ணு தான் அவங்க. சில இடங்களில் அவங்க கேம் ஆடுன விதம் எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை.

ஒரு நல்ல டாஸ்க்லயும் சண்டை போட்டு, அத ஒரு மாதிரி ஆக்கிடுவாங்க. அது விஷயமா தான் எங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வந்தது தவிர பர்சனலா எதுவுமே இல்லை. ஆனா உட்காந்து பேசுற அளவுக்கு ஒரு ரிலேஷன்ஷிப் தனாகிட்ட இல்ல.


ஆனா ஆயிஷாக்கு முன்னாடி நான் உட்கார்ந்து பேசுவேன். அவளுக்கு என்ன பிடிக்கும். அவ சொல்லுவா, 'நீ எதுவா இருந்தாலும் மனசுல தோணுறத சொல்லிடுவ. இந்த மாதிரி ஆட்கள பிடிக்கும் அப்படின்றதுனால தான் உன்கிட்ட வந்து பேசினேன்' அப்படின்னு ஆயிஷா சொன்னா" என ராம் கூறி உள்ளார்.


Advertisement

Advertisement