• Jul 25 2025

என் விஷயத்தில் பணம் கொடுத்து இப்படி செய்கிறார்கள்... கோபத்தில் பகீர் கருத்தை வெளியிட்ட பாவனா...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் நம்ம இளைஞர்கள் பலரதும் கனவுக் கன்னி என்றால் அது நம்ம பாவனா தான். இவரின் நடிப்பினையும் தாண்டி சிரிப்பிற்கு மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். இவர் குறிப்பாக தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


அந்தவகையில் இவர் தமிழ்த் திரையுலகில் 'சித்திரம் பேசுதடி' என்ற திரைப்படத்தின் மூலமாகவே நடிகையாக காலடி எடுத்து வைத்தார். பின்னர் 'வெயில்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பல தரப்புகளில் இருந்தும் பாரட்டுக்கள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் 'தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல்' உட்படப் பல திரைப்படங்களில்  அசத்தியிருக்கின்றார்.


இவ்வாறாக தமிழ், மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். தற்போது 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்து' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் வலைத்தளங்களில் இவருக்கு எதிராக பல அவதூறு கருத்துக்கள் பரப்பி வருகின்றார். 


இதனால் அவர் மிகுந்த கோபம் அடைந்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் பாவனா அளித்துள்ள பேட்டியில், ''மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் இருந்தது. ஆனாலும் நண்பர்கள் என்னை மீண்டும் நடிக்க வைத்து விட்டார்கள். இணைய தளங்களில் எனக்கு எதிராக அவதூறுகள் வருகின்றன. 

இவ்வாறாக வலைத்தளம் மூலம் மற்றவர்களை மிரட்டுவது, களங்கம் ஏற்படுத்துவது சிலரின் வேலையாகிவிட்டது. அதுமட்டுமல்லாது பணம் கொடுத்து ஆட்களை பணியமர்த்தியும் இதை செய்ய வைக்கிறார்கள். எனது கதாபாத்திரங்கள் வாயிலாக என்னை அறிந்தவர்களும் இதனை செய்தனர். என் முதுகுக்கு பின்னால் பேசியவர்களை நான் எப்போதும் மறக்க மாட்டேன்" என ஆவேசத்துடன் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement