• Jul 26 2025

இனியாவை பார்க்க பதறி ஓடிய பாக்கியா- கோபியால் காத்திருந்த அதிர்ச்சி... இன்றைய முழு எபிசோடு அப்டேட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி தொடர்.தற்போது விறுவிறுப்பு கட்டத்தை நோக்கி செல்லும் இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்...

இனியாவின் ஸ்கூல் வேன் விபத்துக்குள்ளானதாக நிகிதாவின் அம்மா போன் போட்டு சொல்ல இதனால் பதறும் பாக்கியா எழிலை கூட்டிக்கொண்டு உடனே  ஸ்கூலுக்கு கிளம்புகிறார். அதற்குள் கோபி ஸ்கூலுக்கு வந்து இனியாவுக்கு என்னாச்சு என விசாரிக்க அடி ஏதும் இல்லை ஜெனரல் செக்கப் தான் பண்ணிட்டு இருக்காங்க என சொல்கின்றனர்.



பாக்கியா மற்றும் எழிலும் அடுத்து ஸ்கூலுக்கு வந்து விசாரிக்க அவர்களிடமும் இதே பதிலை சொல்கின்றனர். அத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க கடைசியில் கோபி பாக்யாவை பார்த்துவிட்டு இனியாவை பாக்கியா கண்ணில் காட்டக் கூடாதென முடிவெடுத்து செக்கப் நடக்கும் இடத்தில் சென்று இனியாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு உடனே  கிளம்பி விடுகிறார்.

பின்னர்  பாக்யா கோபி போல் இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து செல்வதற்குள் இவர்கள் கிளம்பி விடுகின்றனர். இதன் பின்னர் இனியா பற்றி விசாரிக்க அவளை அவரது அப்பா கூட்டிச் சென்று விட்டதாக கூற பாக்யா அழுதபடி கீழே இறங்கி வர அதற்குள் கோபி வீட்டுக்கு வந்து விடுகிறார்.

இதனால் பாக்கியா என் பொண்ணை பார்க்க எனக்கு உரிமை இல்லையா என ரோடு எல்லாம் அழுதபடி வர எழில் அவரை சமாதானம் செய்கிறார். வீட்டுக்கு வந்ததும் கோபியின் காரை பார்த்த பாக்யா அது எப்படி என் பொண்ணு என் கண்ணுல காட்டாம கூட்டிட்டு வரலாம் எனக்கு அவ மேல உரிமை இல்லையா நான் அவளை பார்த்தே ஆகணும் என ராதிகா வீட்டிற்கு விறுவிறுவென நடந்து வருகிறார் பாக்யா.


மேலும் வீட்டுக்கு வந்ததும் மாமனாரை பார்த்து மாமா இனியாவ பாக்கணும் என சொல்ல அவர் இனியா இனியா கூப்பிடுகிறார். பாக்கியாவும் இனியா வெளியே வா அம்மா உன்னை பார்க்கணும் என கூற கோபி ரூமுக்குள் இருந்து இனியாவை வெளியே வரவிடாமல் உள்ளேயே இருக்க சொல்லிவிட்டு வெளியே வந்து அவள் என் பொண்ணு அவள உன்னால பார்க்க முடியாதென பாக்யாவுடன் சண்டை இடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement