• Jul 26 2025

பிரபாஸ் இந்த நபரை தான் காதலிக்கின்றார்... உண்மையை போட்டுடைத்த நடிகர்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரபாஸுக்கு தற்போது 43 வயதாகிறது. மேலும் அவருக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் முயற்சித்தாலும் அவர் சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பாகுபலி படத்தில் நடிப்பதற்காக அவர் கிட்டத்தட்ட 5 வருடங்களை ஒதுக்கிய நிலையில், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.

பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி காதலித்து வருகிறார்கள் என முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் அதை அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.

அதன் பின்னர்  தற்போது பிரபாஸ் ஹிந்தி நடிகை க்ரித்தி சனோன் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசு ஆரம்பித்துள்ளது. பிரபாஸை திருமணம் செய்ய விரும்புவதாக நடிகை பேட்டியில் சொன்னதும் வைரலானது.


எனினும் சமீபத்தில் வருண் தவான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர் க்ரித்தி சனோன் காதல் பற்றி கூறி இருக்கிறார்.

"க்ரித்தி சனோன் சிங்கிள் இல்லை. அவர் பெயர் ஒரு ஆணின் இதயத்தில் எழுதப்பட்டு விட்டது.மேலும்  அவர் தற்போது தீபிகா படுகோன் உடன் ஷூட்டிங்கில் இருக்கிறார்" என தெரிவித்து இருக்கிறார்.


எனினும் தற்போது பிரபாஸ் தான் தீபிகா உடன் ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். அதனால் தற்போது பிரபாஸ் - க்ரித்தி சனோன் காதல் இதன் மூலம் உறுதியாகி உள்ளது.


Advertisement

Advertisement