• Jul 25 2025

அந்த நடிகரையும் விடாது டார்ச்சர் செய்யும் இயக்குநர் பாலா...உண்மையை உடைத்த முக்கிய பிரபலம்.!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பாலா என்றாலே போது, தன் படத்தில் நடிக்கும் கலைஞர்களை எப்படியாவது நடிப்பு வரவழைக்க எந்த அளவிற்கும் சென்றுவிடுவார் என்பது தான். அந்தவகையில் நடிகர் சூர்யா, தயாரித்து நடிக்கவிருந்த வணங்கான் படம் சில காரணங்களால் விலகியது பெரியளவில் பேசப்பட்டது.

ஷூட்டிங்கில் சூர்யாவை அதிக செலவுகளை இழுத்துவிட்டும் பல தூரம் ஓடவிட்டு பார்த்திருக்கிறார் பாலா. இதனால் அவரின் டார்ச்சர் தாங்கமுடியாமல் தான் சூர்யா விலகிவிட்டதாகவும் தகவல் வெளியானது.


அதன்பின்னர் வணங்கான் படத்தின் டைட்டிலில் சூர்யாவுக்கு பதில் நடிகர் அருண் விஜய் நடித்து வருகிறார். அத்தோடு பாலாவின் கேரெக்டர் தெரிந்தும் அதுவும் விஷாலின் கண்ணை வேறொரு கண்ணாக மாற்றியது ஆரியாவை கொடுமைபடுத்தியது போன்ற பல விசயங்கள் அறிந்து தான் அருண் விஜய் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அப்படி பாலா எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடியவராக திகழ்ந்து வந்த அருண் விஜயை பாலா படாதபாடு படுத்தி வருகிறாராம். கிழித்தக்கோட்டை தாண்டமுடியாமல் டார்ச்சரை அனுபவித்து வருகிறாராம் அருண் விஜய்.

இதற்கு காரணம் பல படங்களில் நடித்தும் அருண் விஜய்யால் உயரத்திற்கு வரமுடியாமல் ராசியில்லா நடிகராக திகழ்ந்து வருகிறார்.எனினும் அதையெல்லாம் உடைக்க பாலாவின் வணங்கான் படம் முக்கிய இடம் பிடிக்கும் என்பதற்காக தான் அருண் விஜய் தாங்கிக்கொள்கிறார் என்று சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement