• Jul 25 2025

திரும்ப உங்களை பார்க்க வேணும் எப்போ சீரியலுக்கு வருவீங்க அருண் அண்ணா- டெலிவிஷன் விருது விழாவில் கலந்து கொண்ட பாரதி

stella / 2 years ago

Advertisement

Listen News!


சினிமா பிரபலங்களுக்கு நிகராக சின்னத்திரை பிரபலங்களுக்கு மக்கள் மத்தியில் அதிக மவுசு உண்டு. சீரியல்கள் தினந்தோறும் ஒளிபரப்பப்படுவதால் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்கள் வீட்டில் ஒருவராக மக்கள் பார்த்து வருவம் சம்பவங்களும் அரங்கேறுகின்றன. அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அண்மையில் முடிவடைந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் ஒரு கால கட்டத்தில் ரிஆர்பியிலும் முன்னணியில் இருந்தது. அத்தோடு இந்த சீரியலில் நடித்த பிரபலங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.


இந்த நிலையில் நேற்றைய தினம் (ஞாயிறு) 8வது விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாரதி கண்ணம்மா சீசன் 2 குழுவினருடன் அருண் பிரசாத் ஹேமாவாக நடித்த லிசா அகிலாக நடித்தோர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.


இதனை பார்த்த ரசிகர்கள் அருண் அண்ணா எப்போ மீண்டும் சீரியலுக்கு வருவீங்க உங்களை மிஸ் பண்ணுறோம் என்று தெரிவித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்பொழுது வெளியாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement