• Jul 26 2025

பசங்க பட கிஷோருக்கு நடந்து முடிந்த திருமணம்..தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பசங்க படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோருக்கு இன்று திருமணம்  பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அவர் சமீபத்தில் ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது காதலை அறிவித்திருந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பசங்க. அத்தோடு இந்த படத்தை சசிகுமார் தயாரித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் இயக்குனர் பாண்டிராஜ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார். மேலும் விமலும் இந்தப் படத்தின் மூலமாகத்தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படி பலரை திரைத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்த பசங்க படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


யதார்த்தமான இந்த படத்தில் குழந்தைகளை மையமாக வைத்தும் அவர்களுக்குள், நடக்கும் சண்டைகளை மையமாக வைத்தும் எடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு இந்த படத்தில் வெற்றிக்கு பின்னர் பசங்க 2 எடுக்கப்பட்டது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.


இந்தப் படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் கிஷோரும் ஜீவா நித்தியானந்தம் என்கிற கதாபாத்திரத்தில் ஸ்ரீராமும் நடித்திருந்தார்கள். மேலும் இதில் ஸ்ரீராம் அதற்குப் பிறகு வேறு சில படங்களிலும் நடித்திருக்கிறார். கிஷோர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பசங்க படத்தில் நடித்து இருந்த கிஷோருக்கு தேசிய விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் ஆகியவை அளிக்கப்பட்டன.


எனினும் சமீபத்தில் இவர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமார் காதலிப்பதாக வெளிப்படுத்தி இருந்தார். இன்ஸ்டாகிராமில் அறிவித்த அவர் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். உன்னை திருமணம் செய்து கொள்ளும் நாளை எதிர்பார்த்து இருக்கிறேன். இதனை அடுத்த வருடம் நாம் இருவரும் இணைந்து நம்முடைய பிறந்த நாளை கணவன் மனைவியாக கொண்டாட இருக்கிறோம். லவ் யூ என்று பதிவிட்டு இருந்தார்.


அத்தோடு விஜய் டிவியின் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்றான ஆபீஸ் என்கிற தொடரின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ப்ரீத்தி குமார். இவர் இதன் பின்னர், லட்சுமி கல்யாணம், வள்ளி, பிரியமானவள், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, லட்சுமி வந்தாச்சு, கோபுரங்கள் சாய்வதில்லை, வானத்தைப்போல போன்ற பல தொடர்களில் நடித்து வருகிறார்.


எனினும் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவருக்கும் அவர்களது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


சோசியல்மீடியாவில்  கிஷோர் மற்றும் ப்ரீத்தியின் திருமண புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement