• Jul 26 2025

பென்னி தயாளுக்கு என்னாச்சு..? சூப்பர் சிங்கர் மேடையில் கண்ணீர் விட்டு அழுகை.. ஓடி வந்து கட்டியணைத்து ஆறுதல் சொன்ன நடுவர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில்பல ரசிகர்களை கொள்ளை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது 'சூப்பர் சிங்கர்'. இந்த நிகழ்ச்சியானது சீனியர், ஜூனியர் என மாறி மாறி ஒளிபரப்பாகி வருகின்றது.

அந்தவகையில் தற்போது பெரியவர்களுக்கான சீசன் ஒளிபரப்பாகி இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.


இந்நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பாடகர் பென்னி தயாள் பங்கு பற்றி வருகின்றார்.  இந்த நிகழ்ச்சிக்கு வந்த நாளிலிருந்தோ இப்போது வரை இவர் எப்போதுமே சிரித்துக் கொண்டிருக்கும் ஒருவராகத் தான் திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் இந்த வாரம் அன்புடன் நான் என்ற ரவுண்ட் வந்துள்ளது. அந்தவகையில் இதில் நடுவர்களுக்காக போட்டியாளர்கள் பாடினார்கள். அந்தவரிசையில் பென்னி தயாள் தனக்காக ஒரு போட்டியாளர் பாடியதை கண்டு கண் கலங்கி மேடையிலேயே மிகவும் எமோஷ்னல் ஆகி அழுதுள்ளார்.


உடனே எழுந்து சென்ற சக நடுவர்கள் அவரைக் கட்டியணைத்து ஆறுதல் கூறியுள்ளனர்.

அந்த ப்ரோமோ வீடியோ ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement