• Jul 24 2025

வானத்தைப் போல சீரியல் நடிகையை காதலித்து வரும் பசங்க திரைப்பட கிசோர்- இந்த நடிகைக்கு இவரை விட வயசு அதிகமாச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'பசங்க' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் கிஷோர். இப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றார். நடிப்பின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக, தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகின்றார்.


'பசங்க' படத்தை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி , கோலி சோடா,  போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 'சகா', 'ஆறு அத்தியாயம்', 'ஹவுஸ் ஓனர்', 'கம்பன் கழகம்' போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் 'வரமாட்டியா' போன்ற ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார்.

தற்போது திருமண வயதை எட்டியுள்ள கிஷோர், தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். அதாவது நடிகையும் தொகுப்பாளினியுமான ப்ரீத்தி குமாரையே காதலிப்பதாக அறிவித்துள்ளார். இவர் தமிழ் செல்வி' என்கிற படத்திலும் நடித்துள்ளார்.


இது தவிர லட்சுமி வந்தாச்சு, நெஞ்சம் மறப்பதில்லை, பிரியமானவள், சுந்தரி நீயும் சுந்தரி நானும், மற்றும் வானத்தப்போல போன்ற சீரியல்களில் நடித்துள்ள இவருக்கு 32 வயதாகுகிறது. கிஷோரை விட நான்கு வயது மூத்தவரான ப்ரீத்தியை தான் காதலிப்பதாக அறிவித்துள்ளார். 


விரைவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில், இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement